பாலிவுட்டிற்கு மட்டும் 'அப்படி"..கோலிவுட்டிற்கு இப்படியா...நயன் பாலிசி...ரசிகர்கள் அப்செட்
ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான "இறைவன்" படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இறைவன்
என்றென்றும் புன்னைகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ.அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "இறைவன்". இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எப்போதும் தான் நடிக்கும் படங்களின் எந்த ஒரு ப்ரோமோஷனும் செய்திராத நடிகை நயன்தாரா, இந்த படத்திற்கும் அதே பாலிசியை கடைபிடித்துள்ளார். இதுவே தற்போது சில விவாதங்களை எழுப்பி இருக்கிறது.
நயன் கண்டுக்காத இறைவன் படம்
ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நயன்தாரா, அண்மையில் தான் துவங்கிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அந்த படத்தின் ட்ரைலரை பகிர்ந்து கொண்டார். நேரடியாக படத்தின் ப்ரோமோஷனில் நயன்தாரா பங்கெடுக்கவில்லை என்றாலும், இது போன்ற படம் குறித்து சமூகவலைதளபக்கத்தில் பகிர்வதும் ஒரு வகை ப்ரோமோஷனே.

ஜவான் படத்திற்காக செய்த நயன்தாரா, தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "இறைவன்" படம் குறித்து எந்த ஒரு போஸ்டோ அல்லது ஸ்டோரியோ போடாதது இது கோலிவுட் வட்டாரங்களில் விவாத பொருளாக மாறியிருக்கிறது.
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan