கோடை காலத்தில் ஏன் முலாம் பழம் சாப்பிடுவது அவசியம் தெரியுமா?

Muskmelon Summer Season Life Style
By Sakthi Raj Mar 24, 2026 11:05 AM GMT
Report

கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடை காலத்திற்கு எல்லோரும் அதிக அளவில் தண்ணீரும் நிறைய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வோம். அந்த வகையில் கோடை காலங்களில் கட்டாயமாக இந்த ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

கோடை காலத்தில் நாம் முலாம் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. மேலும் இந்த பழத்தில் மிகக் குறைவான கலோரிகள் உள்ளன. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்திருக்கிறது.

கோடை காலத்தில் ஏன் முலாம் பழம் சாப்பிடுவது அவசியம் தெரியுமா? | Why Muskmelon Is Important To Eat During Summer

முருங்கைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறதா?

முருங்கைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறதா?

இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் நம்முடைய உடல் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது. மேலும் முலாம் பழத்தில் மிகவும் குறைந்த அளவு கொழுப்பு சத்தும், அதிக அளவில் பொட்டாசியம் இருக்கிறது.

அதனால் இந்த பழம் நம் உடலால் எளிதில் ஜீரணிக்க கூடிய ஒரு நல்ல கார்போஹைட்ரேடுகளை அவை நமக்கு கொடுக்கிறது. மேலும் இந்த பழத்தில் இருக்கக்கூடிய விதைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதுவும் நமக்கு எளிதில் ஜீரணமாக உதவுகிறது.

முலாம் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதாக சொல்கிறார்கள். இது நம் வயிற்றுப் புண்களை குணப்படுத்துவதோடு நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் வயிற்று கோளாறுகள் இருப்பவர்கள் இந்த பழத்தை உட்கொள்வதால் அவர்கள் நல்ல பலன் அடைகிறார்கள்.

கோடை காலத்தில் ஏன் முலாம் பழம் சாப்பிடுவது அவசியம் தெரியுமா? | Why Muskmelon Is Important To Eat During Summer

உடல் ஆரோக்கியத்திற்கு பல மடங்கு சத்துக்கள் கொடுக்கும் இடியாப்பம்

உடல் ஆரோக்கியத்திற்கு பல மடங்கு சத்துக்கள் கொடுக்கும் இடியாப்பம்

அதேபோல் முலாம் பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் இது நம்முடைய கண்களின் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. அதோடு முலாம் பழத்தில் உள்ள ஆக்சலேட் என்ற அமிலம் சிறுநீரகப் பிரச்சனைகள் சிலவற்றையும் தடுத்து உதவுகிறது.

மேலும் முலாம் பழம் நாம் எடுத்துக் கொள்வதால் அதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம்முடைய சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. இது நம்முடைய சருமத்திற்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து நிறைய சத்துக்களை நமக்கு கொடுக்கிறது.