பாஜக கூட்டணியில் இருந்து விலகியது இதனால் தான் - ஈபிஎஸ் பரபரப்பு விளக்கம்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami trichy Lok Sabha Election 2024
By Jiyath Apr 06, 2024 12:38 PM GMT
Report

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி 

திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் "அ.தி.மு.க. ஆட்சி காலம் தான் தமிழகத்தில் பொற்காலம்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது இதனால் தான் - ஈபிஎஸ் பரபரப்பு விளக்கம்! | Why Leave Bjp Explanation Edappadi Palaniswami

எங்களது ஆட்சியை பற்றி முதல் அமைச்சர் ஸ்டாலின் இருண்ட காலம் என்று சொல்கிறார். யார் ஆட்சியை பற்றி குறை சொல்கிறீர்கள்?.. தி.மு.க.வின் இந்த 3 ஆண்டு கால ஆட்சி தான் இருண்ட காலம். பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறியது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவு விவகாரம்: இரட்டை வேடம் போடும் பாஜக - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கச்சத்தீவு விவகாரம்: இரட்டை வேடம் போடும் பாஜக - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சதி செய்தனர்

ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியம் இல்லை, மக்கள் முக்கியம் என்பதால் பாஜக கூட்டணியிலிருந்து விலகினோம். தமிழகத்தில் செல்வாக்கை இழந்த ஸ்டாலின், இந்தியா கூட்டணி என்று சொல்லி தேர்தலை சந்திக்க இருக்கிறது.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது இதனால் தான் - ஈபிஎஸ் பரபரப்பு விளக்கம்! | Why Leave Bjp Explanation Edappadi Palaniswami

இந்தியா கூட்டணி பெயரளவுக்கு தான் உள்ளது. பிரதமர் வேட்பாளரே யார் என்று சொல்லவில்லை. திமுகவுடன் சேர்ந்து அ.தி.மு.க சின்னத்தை முடக்க சிலர் சதி செய்தனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை" என்றார்.