CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டதற்கு காரணம் இது தான்..!

MS Dhoni Ravindra Jadeja Chennai Super Kings
By Thahir Aug 17, 2022 01:48 PM GMT
Report

கேப்டன் பொறுப்பில் இருந்து சென்னை அணி நிர்வாகம் ஜடேஜாவை நீக்கியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சொதப்பிய ஜடேஜா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டி ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது.

ஐபிஎல் ஏலத்தின் போது தோனியை விட அதிக விலை கொடுத்து ஜடேஜாவை வாங்கியது சென்னை அணி நிர்வாகம்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஜடேஜா தலைமையின் கீழ் விளையாடிய சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடியது.

CSK

இதில் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது மற்ற அனைத்து போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்தது.

இந்த போட்டிகளில் ஜடேஜா மிக மேசமாக விளையாடியது சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புளை சந்தித்தது.

இதையடுத்த சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா. பின்னர் காயம் காரணமாகவும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என்று சென்னை அணி நிர்வாகம் விலக்கம் கொடுத்தது.

இந்த நிலையில் அடுத்து வரக் கூடிய ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக ஜடேஜா விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் எனவும் அவர் இனி விளையாட வாய்ப்பு இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நீக்கப்பட்டதற்கு இது தான் காரணம் 

இது குறித்து தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி, “ஜடேஜா ஐபிஎல் தொடரில் சொதப்பினால் அது இந்திய அணியிலும் அவரது இடத்தை கடுமையாக பாதிக்கும் என சென்னை அணியும், குறிப்பாக தோனியும் கருதினர்.

CSK

இந்திய அணியில் ஜடேஜாவின் இடத்திற்கு பிரச்சனை வந்துவிட கூடாது என்பதற்காகவே தோனியும், சென்னை அணியும் இணைந்து ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து விலக்கினர்” என தெரியவந்துள்ளது.

பெரும்பாலான ஆங்கில ஊடங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. அதே போல் கடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு சென்னை அணிக்கும், ஜடேஜாவிற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை எனவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CSK

இதனால் ஜடேஜா அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பே இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.