விண்வெளியில் முளைத்த இந்தியாவின் விதை - காராமணியை இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய காராமணி விதை விண்வெளியில் முளைத்துள்ளது.
இஸ்ரோ
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், ஆந்திர மாநிலம், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 30ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து ஆய்வு ஒன்றை நடத்த திட்டமிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டுடன், 'சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ரிசர்ச் மாட்யூல்' (CROPS) என்பதை அனுப்பி வைத்தனர்.
விண்வெளியில் காராமணி விதை
இதில் 8 காராமணி விதை, அது முளைக்க தேவையான மண், அதன் வளர்ச்சி மற்றும் சுற்றுப்புறத்தை கண்காணிக்க தேவையான சென்சார்கள்,கேமரா,ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு ஏற்ற ஹைட்ரோபோனிக் அமைப்புகள், விதைக்கு தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்தை கொடுக்க தானியங்கி அமைப்பு ஆகியவை அனுப்பப்பட்டது.
இதில் அனுப்பப்பட்ட விதைகள் தற்போது முளைத்துள்ளதாக இஸ்ரோ அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. 7 நாட்களில் விதைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 நாட்களிலே விதை முளைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளியின் சூழலில் வளருவதற்கு ஏற்ற மற்றும் குறுகிய கால பயிராக இருக்கும் விதைகள் என பல்வேறு விதைகளை பரிசோதித்த இஸ்ரோ இறுதியாக காராமணி விதைதான் ஏற்றதாக இருக்கும் என விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.