சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு.. ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு - EPS பேச்சு!

Tamil nadu TN Assembly Edappadi K. Palaniswami
By Vidhya Senthil Mar 14, 2025 07:30 AM GMT
Report

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது குறித்து  ஈபிஎஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

 பட்ஜெட் 

2025-26-ம் நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட் கடந்த ப்ரவரி மாதம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இரண்டாவது பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அப்போது சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு.. ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு - EPS பேச்சு! | Why Is Aiadmk Walking Out Of The Assembly Eps

அப்போது நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்துவரும் சூழலில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பள்ளி பாடத்திட்டத்தில் செஸ்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

பள்ளி பாடத்திட்டத்தில் செஸ்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

அப்போது பேசியவர்,’’ கடந்த ஒருவார காலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களிலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

 அதிமுக வெளிநடப்பு 

அதன் அடிப்படையில், நேற்று அமலாக்கத்துறை செய்தி ஒன்றை வெளியிட்டது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு.. ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு - EPS பேச்சு! | Why Is Aiadmk Walking Out Of The Assembly Eps

இந்த விசாரணை முடியும்போது, இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக சுமார், கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.இந்த அரசு அதுகுறித்து இதுவரை இன்னும் எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை.

இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.நிதிநிலை அறிக்கை தொடர்பான கேள்விக்கு, “முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபிறகு அதுகுறித்து கருத்துகளை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.