2011-ஆம் ஆண்டின் வழக்கு...மீண்டும் விசாரிப்பது ஏன்..சீமான் வழக்கறிஞர் கேள்வி
நடிகை விஜயலக்ஷ்மி வழக்கில் காவல்துறை விசாரணைக்கு ஏன் நாம் தமிழர் சீமான் ஆஜராகவில்லை என்பதை குறித்து வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.
விஜயலக்ஷ்மி - சீமான் விவகாரம்
நாம தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரை அளித்திருந்தார்.
இந்த புகாரில் விஜயலக்ஷ்மியிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தையும் அளித்திருந்தார்.
மீண்டும் விசாரிக்கப்படுவது ஏன்..?
இந்த புகார்களின் அடிப்படையில் இன்று நாம் தமிழர் சீமான் நேரில் ஆஜராக வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சீமான் நேரில் ஆஜராகாத நிலையில், அது குறித்து அவர் தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
சீமான், நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராக வேண்டி இருக்கின்ற காரணத்தால் அவர் இன்று ஆஜராகவில்லை என கூறினார். மேலும், 2011-ஆம் ஆண்டு அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறிய விஜயலக்ஷ்மி மீண்டும் புகார் கூறியதன் பின்னணி என்ன..? என வினவிய அவர், கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விசாரணை ஏன் நடத்தப்படுகிறது என்றும் வினவினார்.