ஹோட்டல்களில் உணவிற்கு பிறகு பெருஞ்சீரகம் கொடுப்பது ஏன் தெரியுமா?
நாம் ஏதேனும் ஒரு உணவகங்களுக்கு சென்று அங்கு நாம் சாப்பிட்டு முடித்த பிறகு கடைகளில் சீரகம் நமக்கு கொடுப்பதை பார்க்கலாம். இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய முக்கியமான மருத்துவம் நிறைந்த காரணம் பலருக்கும் தெரியவில்லை. அதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே, பெருஞ்சீரகத்திற்கு நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த கூடிய ஆற்றல் இருக்கிறது. அதனால் நாம் சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணிக்கவும் வயிற்று சுமையை அவை குறைக்கவும் உதவுகிறது. அதனால் நாம் சாப்பிட்டு முடித்து பெருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய வயிறானது அசௌகரியத்தை குறைத்து இலகுவாக வைக்க உதவுகிறது.

அது மட்டுமல்லாமல் நாம் சாப்பிட்ட பிறகு நம்முடைய வாயில் இருந்து வரக்கூடிய துர் நாற்றத்தையும் அது நீக்குகிறது. பெருஞ்சீரகத்தில் இருக்கக்கூடிய நறுமணம் நம்முடைய வாயை புத்துணர்ச்சியாக வைப்பதற்கு உதவுகிறது.
அதை போல் பெருஞ்சீரகம் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய அசுத்தங்களை அகற்றுவதோடு கல்லீரலுக்கும் நன்மை அளிக்கிறது. வயிற்று வீக்கம், வயிற்று பிடிப்புகளில் இருந்து நிவாரணம் பெற இந்த பெருஞ்சீரகத்தை நாம் கட்டாயம் பயன்படுத்தலாம்.
இதில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் நிறைந்திருக்கிறது. அதை போல் உடல் எடையை குறைக்கவும் உடலில் உள்ள கொழுப்புகள் கரையவும் உதவுகிறது. ஆதலால் இனிமேல் நீங்கள் உணவகங்களுக்கு சென்ற சாப்பிட முடித்த பிறகு பெருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ள தவறாதீர்கள். அதேபோல் வீடுகளிலும் நீங்கள் அசைவம் அல்லது சைவம் எந்த உணவு எடுத்தாலும் பெருஞ்சீரகத்தை சாப்பாட்டிற்கு பிறகு எடுத்துக் கொள்ளும் பொழுது நிச்சயம் செரிமான பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |