நான் ஏன் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினேன் தெரியுமா? கிறிஸ் வோக்ஸ் விளக்கம்

IPL 2021 ipl chrisvokes allrounder Chris Woakes
By Irumporai Sep 14, 2021 07:30 AM GMT
Report

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளதால் ஐபிஎல்- போட்டியில் இருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்க உள்ளது.

துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து ஏற்கெனவே விலகிய நிலையில் கடந்த வார இறுதியில் ஜானி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), ஜாஸ் பட்லர், டேவிட் மலான் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

நான் ஏன் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினேன் தெரியுமா? கிறிஸ் வோக்ஸ் விளக்கம் | Why I Dropped Out Of The Ipl Chris Vokes

இந்த நிலையில் ஐபிஎல் 2021 போட்டியில் விலகியதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் கிறிஸ் வோக்ஸ் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு, டி20 உலகக் கோப்பை அணியில் நான் இடம்பெறுவேன் என எனக்குத் தெரியாது. ஐபிஎல் போட்டியின் அட்டவணை மாற்றப்பட்டது. டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டி என அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் இருப்பதால் குறைந்த நாள்களில் நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என்று எனக்கும் விருப்பம் தான். ஆனால் ஏதாவது ஒரு போட்டியிலிருந்து விலகவேண்டிய நிலைமையில் உள்ளேன் எனக் கூறியுள்ளார்.