வசதியா..? சுற்றுசூழல் அக்கறையா..? அதிகரிக்கும் எலெக்ட்ரிக் கார் விற்பனை..!
இந்தியா அளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை பெரும் தாக்கத்தை இளைய தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எலெக்ட்ரிக் கார்கள்
கார் என்பது எப்போதுமே மக்களிடம் வரவேற்பை பெற்ற ஒரு விஷயமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக இளைய தலைமுறையினர் கார் வாங்குவதில் பெரும் கவனத்தை கொண்டுள்ளனர்.
உலகம் நவீனமயமாவதை அடுத்து, பெட்ரோல் - டீசல் கார்களை அடுத்து தற்போது எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் அதிகளவில் கிடைக்கப்பெறுகின்றன. அறிமுகமான சில காலங்களிலேயே இந்த வகை கார்கள் மக்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஏறக்குறைய 80 சதவிகிதத்தினருக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலையுள்ள கார்களை வாங்க தான் ஆர்வமாக உள்ளனர்.
காரணம்
மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலையுள்ள பெட்ரோல்/டீசல் கார்களை வாங்க 59 சதவீததினரும், அதே விலையிலுள்ள எலெக்ட்ரிக் கார்களை வாங்க 58 சதவிகிதத்தினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பெரும்பாலானவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது பெரும்பாலானோர் இம்மாதிரியான கார்கள் எளிதாக சார்ஜ் செய்திட முடியும் என்ற காரணத்தால், இம்மாதிரியான வாகனத்தை அதிகளவில் விரும்புகின்றனர்.
அதே நேரத்தில் கணிசமானவர்கள் இது சுற்றுசூழலை பாதுகாக்கும் ஒரு யுக்தி என்பதாலும், எலெக்ட்ரிக் கார்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.