வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்-யின் மனைவி சங்கீதா கலந்து கொள்ளாதது ஏன்?
வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்-ன் மனைவி சங்கீதா கலந்துகொள்ளவில்லை.
‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா
விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய்-யின் மனைவி கலந்து கொள்ளாதது ஏன்?
இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான திரைப்பிரபலங்களும், விஜய்-ன் அம்மா, அப்பாவும் கலந்துகொண்டனர். ஆனால் அவரது மனைவி சங்கீதா இந்த விழாவில் கலந்துகொள்ளாதது கேள்வியாக உள்ளது. இதுகுறித்து கோலிவுட்டில் பல்வேறு விதமான தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளது.