விளையாட்டு அரங்கில் சூயிங்கம் மெல்லும் கிரிக்கெட் வீரர்கள்..ரகசியம் தெரியுமா?

Sumathi
in கிரிக்கெட்Report this article
கபில்தேவ் முதல் விராட் கோலி வரை பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் சூயிங்கம் மெல்லுவதை கண்டிருப்போம்.
கிரிக்கெட் ஜாம்பவான்கள்
இந்த நடைமுறைக்கு பின்னால் இருக்கும் அதிக அறிவியல் காரணங்கள் உள்ளது. சூயிங்கம் சாப்பிடுவது கிரிக்கெட் வீரர்களை அதிக மனஅழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்து அமைதியாக வைத்திருக்க உதவும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற வெப்பமான காலநிலையை கொண்ட நாடுகளில் அதிக நேரம் மைதானத்தில் நிற்பதால் நீரிழப்பு ஏற்படும். இது நீரேற்றமாக வைத்திருக்க செய்கிறது.
சூயிங்கம்
மேலும், கவனம் இழக்காமல் புத்தி கூர்மை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அது மூளையை விழிப்பாக வைத்திருக்க செய்கிறது மற்றும் உடலில் உள்ள மற்ற பகுதிகளை நரம்பு மண்டலத்தின் உதவியோடு விரைவாக செய்திகளை அனுப்ப வழி செய்கிறது.
அறிவியல்
சூயிங்கம்மில் உள்ள குளுக்கோஸ் ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டியாக வேலை செய்யும். மேலும் இதனால் கிரிக்கெட் வீரர்கள் ஆற்றல் குறைவாக இருக்கும்போதும் அதை சமாளிக்க இது உதவுகிறது. இதனால் தான், கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் சூயிங் கம் மெல்லுகின்றனர்.
காதலியை புதைத்து அருகிலேயே தூக்கில் தொங்கிய காதலன்!