விளிம்புநிலை மக்களுக்காக.. தொல். திருமாவளவன்
காட்டுமன்னார்கோவில் தொகுதி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ல் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தொல்.திருமாவளவன் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்குவது ஏன் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.
அவரது அரசியல் பயணம் தொடங்கிய காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

2016ம் ஆண்டு போட்டியிட்ட போது வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தார், தற்போது 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
போட்டியிடுவது ஏன்?
இதுகுறித்து அவர் பேசுகையில், இரண்டே கால் ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன்.
என்னதான் நாடாளுமன்றத்தில் தேசிய அளவிலான பிரச்சனைகள் குறித்து பேசினாலும் விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு சட்டப்பேரவை தான் தீர்வாகும்.
சட்டப்பேரவையில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை எனக்கு நீண்ட நாட்களாக உண்டு என தெரிவித்துள்ளார்.
