நாடு முழுவதும் சிறைகளை திறக்கும் சீனா - அதிபரின் திட்டம் என்ன?
சீனாவில் புதிதாக 200 சிறைகள் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீ சின்பிங்
சீனாவில் நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட அதி நவீன சிறைகள் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீ சின்பிங் 2013 ஆம் ஆண்டு முதல் சீன அதிபராக பதவி வகித்து வருகிறார். இவர் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
200 சிறைகள்
ஊழல் வாதிகள் மட்டுமின்றி கட்சி மற்றும் ராணுவத்தில் தனக்கு எதிராக உள்ளவர்களையும் சிறையில் தள்ளி வருகிறார் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னர் ஷுவாங்குய் என்ற பெயரில் நடத்தப்பட்ட சிறைச்சாலைகளில் சிறை கைதிகளை கடுமையாக சித்திரவதை செய்து வந்ததாக விமர்சனம் எழுந்தது. சிலரை தூங்க விடாமல் 18 மணி நேரம் வரை உக்கார வைத்து கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சர்ச்சைக்குரிய ஷுவாங்குய் சிறை அமைப்பிற்கு மாற்றாக லியுஷி என்ற பெயரில் புதிய சிறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2024 க்கு இடைப்பட்ட காலத்தில் 218 க்கும் மேற்பட்ட லியுஜி சிறைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
தொழிலதிபர்களுக்கு குறி
இந்த சிறையில் அடைக்கப்படும் கைதிகள் 6 மாத காலத்திற்கு குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் என வெளியாட்கள் யாரையும் சந்திக்க முடியாது என கூறப்படுகிறது. இந்த சிறையில், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற முக்கிய புள்ளிகள் அடைக்கப்படுவார்கள்.
இந்த சிறையில், ஆண்டி-ஸ்லிப் மேற்பரப்புகள் போன்ற அம்சங்களுடன், கைதிகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த முறை அதிபர் சீ சின்பிங், தனது கட்சி மற்றும் ராணுவத்தில் உள்ள நபர்களை தாண்டி, பொதுத்துறை நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களை குறி வைக்கப்போகிறார் என விமர்சனம் எழுந்துள்ளது.