வெள்ளரிக்காயை பார்த்து பதறி ஓடும் பூனைகள் -காரணம் என்ன தெரியுமா?
வெள்ளரிக்காயை பார்த்து பூனைகள் பதறியடித்து ஓடுவதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளரிக்காய்
பெரும்பாலும் பூனைகள் வெள்ளரிக்காய் பார்த்தால் பதறி அடித்து ஓடும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பார்த்து இருக்கிறோம். எதனால் அவை ஓடுகின்றன என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பூனைகளைப் பொறுத்தளவில் அவைகளுக்கு வெள்ளரிக்காய்கள் பிடிக்காது. இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பாலான பூனைகளுக்கு வெள்ளரிக்காய் பிடிப்பது இல்லை.ஏனென்றால் வெள்ளரிக்காய் பார்ப்பதற்கு பாம்புகளைப் போன்று, பாம்பைப் போன்று பூனையின் கண்களுக்கு தோன்றும்.
பூனைகள்
பாம்பின் மீது கொண்ட இயற்கையான பயத்தின் காரணமாக பூனைகள் வெள்ளரிக்காயை விரும்புவது கிடையாது.இந்த தகவல் நமக்கு வேடிக்கையாக தோன்றினாலும் உலகின் பல்வேறு நாடுகளில் வெள்ளரிக்காயை பார்த்தால் பூனைகள் பதறி அடித்து ஓடுகின்றன.
அதே நேரத்தில் வேண்டுமென்றே பூனைகளை அச்சுறுத்தக்கூடிய செயல்களை செய்யக்கூடாது என்று கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.