இயக்குனர் பாரதி ராஜாவிற்கும், ர எழுத்திற்கும் இப்படியொரு சீக்ரெட்டா?
இயக்குனர் பாரதிராஜா தான் அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கு பெரும்பாலும் ர என்ற வரிசையில் பெயர் சூட்டுவதை வழக்கமாக கொண்டிருந்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
இயக்குனர் பாரதி ராஜா
இயக்குனர் இமயம் பாரதிராஜா நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், இன்று இவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு பண்ணை வீட்டில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
சினிமா பிரபலங்கள் ஒட்டுமொத்தமாக பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாரதிராஜா தான் அறிமுகப்படுத்திய பெரும்பாலான நடிகைகளுக்கு ர என்ற எழுத்தில் பெயர் வைத்திருந்தார். அதுகுறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ர எழுத்தில் பெயர்
இயக்குனர் பாரதிராஜா தான் அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கு இயற்பெயரை வைக்காமல் ர என்ற வரிசையில் பெயர் சூட்டியிருந்தார்.
முதல் மரியாதை படத்தில் நடித்த சாஷாவின் பெயரை ரஞ்சனி என்று பெயர் மாற்றி அறிமுகப்படுத்தினார். மண் வாசனை படத்தில் ரேவதியை அறிமுகப்படுத்தினார். ஆனால் இவரது இயற்பெயர் ஆஷா என்பதாகும்.
இவ்வாறு ர என்ற எழுத்தில் பெயர் வைப்பது தனிப்பட்ட விருப்பமாக இருக்கின்றது. அதே போன்று கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா என்று பெயரை வைத்து அவரை அறிமுகப்படுத்தினார்.

பின்பு அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதா, புதிய வார்ப்புகள் படத்தில் ரதி, கடலோர கவிதைகள் படத்தில் ரேகா, நாடோடி தென்றல் படத்தில் ரஞ்சிதா, என்னுயிர் தோழன் படத்தில் ரமா என்று அடுத்தடுத்து ர என்ற எழுத்திலே வைத்திருந்தார்.
பாரதிராஜா அறிமுகத்தில் பெயர் மாற்றாத நடிகை புதுநெல்லு புது நாத்து படத்தில் நடித்த சுகன்யா மட்டுமே. சுகன்யாவைத் தொடர்ந்து அடுத்து அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கு ர என்ற எழுத்திலேயே வைத்தார்.
அதே போன்று பிரியாமணிக்கும் பெயர் மாற்றவில்லை. இதுகுறித்து பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பிய போது, அடுத்த வீட்டிற்கு செல்லும் பெண்ணுக்கு ஏன் பெயர் மாற்ற வேண்டும் என்று தோன்றியதால் மாற்றவில்லை என்று கூறினார்.

பாரதி ராஜாவைப் பொறுத்தவரையில் எளிதில் கூப்பிடக்கூடிய வகையில் பெயர் இருந்தால் ரசிகர்களை விரைவில் சென்றடையும் என்ற நோக்கம் மட்டுமே இருந்துள்ளது.
அவர் வைத்த பெயர் நடிகைகளுக்கு அடையாளமாக மட்டுமின்றி ஒரு அதிர்ஷ்டமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.