தேர்தலில் போட்டியில்லை: காரணத்தை மே-4 தெரிவிக்கின்றேன்- அண்ணாமலை
தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிபர்ப்பார்க்கப்ட்ட நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை.
இதனால் அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளதுடன், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக பா.ஜ.க. எனது பெயரை பரிந்துரைக்கவில்லை என அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில்..

இந்த விடயம் தொடர்பில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை குறிப்பிடுகையில்,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக பா.ஜ.க. எனது பெயரை பரிந்துரைக்கவில்லை. எனது பெயரை தமிழக பா.ஜ.க. பரிந்துரைக்காதபோது தேசிய தலைமை எப்படி அறிவிக்கும் என கேள்வியெழுப்பியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஏற்கனவே கட்சி தலைமையிடம் கூறியிருந்தேன்.
கட்சி கூறியதை ஏற்று தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணிக்காக பிரசாரம் செய்ய உள்ளேன். தேர்தலில் போட்டியிடாதது ஏன் என மே 4 ஆம் திகதிக்கு பின்னர் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நெருப்புக்கு எதிராக நெருப்பு! இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை அதிர வைத்த ஈரானின் 92-வது அலை தாக்குதல் IBC Tamil