மகன்கள் மூலம் தனுஷை பழிவாங்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? - அதிர்ச்சி தகவல்
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் இருப்பது போல வெளியான புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இருவரும் நண்பர்கள் என சொல்லி வருவதால் மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே குறைந்து வருகிறது. தனுஷூம், ஐஸ்வர்யாவும் தொடர்ந்து பட வேலைகளில் பிசியாகி உள்ளனர்.
இதனிடையே என்னதான் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை தனுஷ் தவறாமல் செய்து விடுகிறார். அதன் தொடர்ச்சி தான் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்த பின்னர் கொடைக்கானலில் மூத்த மகனுடன் இருந்த போட்டோவும், சில தினங்களுக்கு முன் இளையராஜா நிகழ்ச்சியில் இரு மகன்களுடன் இருக்கும் போட்டோவும் வெளியானது.

ஆனால் ஐஸ்வர்யா பட வேலைகள், மருத்துவமனையில் இருந்தது என விதவிதமாக புகைப்படங்கள் பதிவிட்டாலும் மகன்களுடன் இருக்கும் அல்லது மகன்களை சந்தித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் விவாகரத்து விவகாரத்தில் ஐஸ்வர்யா மீது தான் தவறும் இருப்பது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக மகளிர் தினம், ஹோலி என ஜாலியாக இருந்த ஐஸ்வர்யாவிடம் மகன்களை விட உங்கள் சந்தோஷமா முக்கியம் என ரசிகர்கள் கேட்க தொடங்கினர். இதனால் தான் ஐஸ்வர்யா மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது. என்ன தான் மற்ற விஷயத்தில் போட்டி இருந்தாலும் பெற்ற பிள்ளைகள் விஷயத்தில் இப்படியா இருக்கணும் என ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil