முகமது சிராஜ் ஜெர்சி அணிந்து களமிறங்கிய அபிஷேக் சர்மா: ஐசிசி விதிகள் மீறப்பட்டுள்ளதா?

Mohammed Siraj Abhishek Sharma T20 World Cup 2026
By Thiru Feb 19, 2026 12:28 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர் அபிஷேக் சர்மா முகமது சிராஜின் ஜெர்சியை அணிந்து வந்தது பேசு பொருளாக மாறியுள்ளது.

சிராஜின் ஜெர்சியுடன் களமிறங்கிய அபிஷேக் சர்மா

டி20 உலகக் கோப்பை தொடரில் அகமதாபாத் மைதானத்தில் வைத்து நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா, முகமது சிராஜின் பெயர் தாங்கிய ஜெர்சியை அணிந்து களமிறங்கியதால் ரசிகர்கள் குழப்பத்தில் மூழ்கினர்.

இந்த சம்பவத்திற்கு பின்னால் எந்தவொரு மூட நம்பிக்கையே, விதிமீறலோ இல்லை என்றும், இது தற்செயலாக நடந்த தவறு என்றும் தெரியவந்துள்ளது.

என்ன நடந்தது?

போட்டிக்காக ஹோட்டலில் இருந்து மைதானம் வந்த போது அபிஷேக் சர்மா தன்னுடைய ஜெர்சியை மறந்து வைத்து விட்டு வந்துள்ளார்.

இதனால் போட்டியில் எதுவும் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவசர முடிவாக முகமது சிராஜின் ஜெர்சியை அணிந்து அபிஷேக் சர்மா பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளார்.

இது தொடர்பாக போட்டியின் நடுவர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும், போட்டியில் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நடுவர்கள் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது சிராஜ் ஜெர்சி அணிந்து களமிறங்கிய அபிஷேக் சர்மா: ஐசிசி விதிகள் மீறப்பட்டுள்ளதா? | Why Abhishek Sharma Swap Siraj Jersey Explained

ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

போட்டிகளின் போது ஒரு வீரரின் ஜெர்சியை மற்றொரு வீரர் அணிவதை ஐசிசி முற்றிலுமாக தடை செய்யவில்லை.

ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் நெகிழ்வு தன்மையுடன் இருக்க ஐசிசி அனுமதி வழங்குகிறது.

அதன்படி, அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒரே நிறத்திலான மற்றும் டிசைன் உடைய ஜெர்சியை அணிந்து இருக்க வேண்டும்.

ஜெர்சியில் உள்ள பெயர் மற்றும் எண்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

முகமது சிராஜ் ஜெர்சி அணிந்து களமிறங்கிய அபிஷேக் சர்மா: ஐசிசி விதிகள் மீறப்பட்டுள்ளதா? | Why Abhishek Sharma Swap Siraj Jersey Explained

ஒரே பெயருடைய மற்றும் எண்களை உடைய ஜெர்சி அணிந்த வீரர்கள் இரண்டு பேர் களத்தில் இருக்க கூடாது.(அபிஷேக் சர்மா களத்தில் இருக்கும் நேரத்தில் சிராஜ் களத்தில் விளையாடவில்லை).

இத்தகைய அவசர காலங்களில் இத்தகைய மாற்றங்களை அனுமதிக்க நடுவர்களுக்கு அதிகாரம் உண்டு.