அரசு பள்ளி ஆசிரியரின் விபரீத முடிவு... ஒரு கிராமமே கண்ணீரில் கதறிய பின்னணி

Tamil nadu
By Manchu May 23, 2026 04:29 AM GMT
Report

அரசு தொடக்கபள்ளி ஆசிரியரின் பிரிவை தாக்க முடியாமல் கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக கண்ணீரில் மூழ்கிய சம்பவம் கலங்க வைத்துள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்

நாகை மாவட்டத்தில் அரசு தொடக்கபள்ளியில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியர் வசந்தி. இவர் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள மணலி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். 

55 வயதான வசந்தி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களை தனது சொந்த பிள்ளையைப் போன்று பாசமாக நடத்தி வந்துள்ளார்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்த இவர் வாழ்க்கையில் உள்ள சோகத்தை மறந்து சிரித்த முகத்துடன் இருந்துள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியரின் விபரீத முடிவு... ஒரு கிராமமே கண்ணீரில் கதறிய பின்னணி | Whole Village People Tears At Teachers Funeral

அடுத்தடுத்து மரணம்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வசந்தி டீச்சரின் கணவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். பின்பு அவர் உயிராக வளர்த்த 31 வயதான மகள் நந்தினியும் உயிரிழந்துள்ளார்.

இதனால் மனவருத்தத்தில் இருந்த ஆசிரியர், உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த அவரை மீட்டு கிராம மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் வசந்தி சிகிக்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்களில் கிராமமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, டீச்சர் டீச்சர் என கதறியுள்ளனர்.

ஒரு ஆசிரியருக்கு ஒரு கிராமமே ஒன்று கூடி கண்ணீருடன் விடை கொடுத்த சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

அரசு பள்ளி ஆசிரியரின் விபரீத முடிவு... ஒரு கிராமமே கண்ணீரில் கதறிய பின்னணி | Whole Village People Tears At Teachers Funeral