ஒற்றை பாகிஸ்தான் வீரரை கண்டு மிரளும் ஒட்டுமொத்த இந்திய அணி - யார் தெரியுமா அது?

பாகிஸ்தான் அணியின் ஒரே ஒரு வீரரின் ஆட்டத்தை காண இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மொத்தமாக திரண்ட சம்பவம் டி20 உலகக்கோப்பை தொடரில் அரங்கேறியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 பிரிவு போட்டிகள் வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் தற்போது தகுதிச்சுற்று மற்றும் பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

டி20 உலகக்கோப்பையில் தொடக்கமே மிகவும் எதிர்பார்ப்புடன் அமையும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24 ஆம் தேதி மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் மூலம் இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரக களத்தை புரிந்து வைத்துள்ள அதேசமயம்  பாகிஸ்தானின் மற்றொரு ஹோம் கிரவுண்டாக அமீரகம் பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி மிக கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இருக்கும் ஒரு வீரரின் ஆட்டத்தை காண இந்திய அணி முழுவதும் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நேற்று இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது. இதே மைதானத்தில் தான் பாகிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது அங்குச் சென்ற இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, மற்றும் வீரர்கள் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங்கை கண்டு திகைத்தனர். 

சர்வதேச அளவில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பாபர் அசாம் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். அவர் நேற்றைய போட்டியில் 41 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இவர் இந்திய அணிக்கு நிச்சயம் தலைவலி கொடுப்பார் என்பதால் அவரின் பலவீனம் என்பதை அறிய ரவி சாஸ்திரி, புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார் உள்ளிட்டோர் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். இதே போல இங்கிலாந்து வீரர்களும் அங்கு திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

You May Like This உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்