உலகக்கோப்பை அரையிறுதியில் எந்தெந்த அணிகள்..? "சின்ன தல" ரெய்னாவின் கணிப்பு
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ரெய்னா கணித்துள்ளார்.
உலக கோப்பை
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கி நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளதால் இந்திய அணி கோப்பியை வெல்லும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளும் மிகவும் பலத்துடன் வீரர்களை தயார்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் போட்டியை காணவும் தற்போதிலிருந்தே ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
ரெய்னாவின் கணிப்பு
இந்நிலையில், தற்போது இம்முறை அரை இறுதிக்கு முன்னேறப்போகும் நான்கு அணிகள் எவை என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான "சின்ன தல" ரெய்னா கணித்துள்ளார்.
அவருடைய கணிப்பில், இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அல்லது இலங்கை ஆகிய 4 அணிகள் செல்ல வாய்ப்பு உள்ளது என ரெய்னா கணித்துள்ளார்.
குறிப்பாக இதில், உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பிற்பதாகவும், இந்த தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக குல்தீப் யாதவ் திகழ்வார் என ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.