வெற்றி வாகை சூடப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்

Election
By Fathima Mar 11, 2026 06:00 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம் என்பது குறித்து துல்லியமான கருத்துக்கணிப்பு முடிவுகளை ளெியிட்டுள்ளது கே.கே. சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான பாராவீல்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 30,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டு இந்த விரிவான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதுவரை 70 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வுகளின் முடிவில், திமுக 41.5 சதவிகிதமும், அதிமுக 36.2 சதவிகிதமும், தவெக 13.6 சதவிகிதமும், நாம் தமிழர் கட்சி 7.9 சதவிகிதமும் பெறும் என முடிவுகளை வெளியிட்டுள்ளது.

வெற்றி வாகை சூடப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் | Who Will Win Tn Election 2026

அத்துடன் தமிழகத்தில் தவெக 3வது பெரும் சக்தியாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, சென்னையின் பல நகரங்களில் தவெகவுக்கு வாக்கு வங்கி அதிகரிக்கும் என்றும், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெக குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மிக துல்லியமான கணிப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.