தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்பு - யார் யாருக்கு 6000 ரூபாய் வழங்கப்படும்..?
நேற்று ஆய்வினை முடித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
முதல்வர் அறிவிப்பு
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்றைய தினம் கடும் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர், வெள்ள நிவாரணங்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் வெள்ள நிவாரண பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்டும் என்று கூறினார்.
யார் யாருக்கு நிவாரணம்..?
இந்நிலையில், எந்தெந்த மக்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்டும் என்ற செய்தி குறித்தான தேடல்கள் அதிகரித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிகம் பாதித்த வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளன.
அதே போல தூத்துக்குடி, நெல்லையில் அதிகம் பாதிக்காத வட்டங்கள் உட்பட தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குடும்பங்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே போன்று, வெள்ளப் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.