மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் - தென் மாநிலங்களில் இருந்து 14 பேர்
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது.
மோடி அமைச்சரவை
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கிறது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது.
மூன்றாவது முறையாக பிரதமராகும் மோடி மற்றும்அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. அமைச்சரவையில் தென் மாநிலங்களில் இருந்து 14 பேர் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளாவில் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளதால் அங்குள்ள ஒரே பாஜக எம்.பியான சுரேஷ் கோபிக்கு அமைச்சர் பதவிக்கு வாய்ப்புள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாநிலங்கள்
அண்ணாமலை தமிழ்நாட்டில் ஒரு இடங்களிலும் பாஜக வெல்லவில்லை என்றாலும், தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் இங்கிருந்து கண்டிப்பாக ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. இது பாஜக தலைவர் அண்ணாமலையாகவே இருக்க வாய்ப்பு அதிகம். மேலும் எல்.முருகன், தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோருக்கும் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
கர்நாடகவில் இருந்து குமாரசாமி, பசவராஜ் பொம்மை, பி.சி.மோகன் உட்பட 5 பேருக்கும், தெலங்கானாவில் இருந்து 4 பேருக்கும், ஆந்திராவில் இருந்து ஒருவருக்கும் வாய்ப்பளிக்க உள்ளதாகவே தெரிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியை தெலுங்கு தேசம் கட்சியும் அமைச்சரவையில் பங்கு கேட்பதால் ஆந்திராவில் இருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற மூத்த அமைச்சர்கள் அப்படியே தொடர்வார்கள் என்றும், சிராக் பஸ்வான், அனுப்பிரியா படேல் ஆகிய புது முகஙளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.