மக்களே எச்சரிக்கையா இருங்க : குரங்கம்மை சமூகப் பரவலாக மாறும் - உலக சுகாதார அமைப்பு தகவல்
குரங்கம்மை நோய் சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது குரங்கு அம்மை நோய் பலவேறு நாடுகளில் பரவி வருகிறது , இந்த நிலையில் இதுகுறித்து கூறிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் சில்வி பிரையன்ட், மக்கள் அச்சப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும், சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்று கூறினார்.

எனவே இதனை கருத்தில் கொண்டு உலக நாடுகள் உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் தான் இதற்கு ஒரே தீர்வு எனவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே தொற்று பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை எனவும், சில்வி பிரையன்ட் தெரிவிட்த்துள்ளார்