துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில் - ஆளுநர் பரபர பேச்சு!

R. N. Ravi Kerala
By Sumathi Aug 01, 2022 05:17 AM GMT
Report

துப்பாக்கியை கையில் எடுக்கும் சக்திகளிடம் துப்பாக்கியால்தான் பேச வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆயுதக் குழு

கேரளா, கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில் கொடுக்க வேண்டும்.

துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில் - ஆளுநர் பரபர பேச்சு! | Who Uses A Gun Be Dealt With A Gun Tn Governor

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. ஆயுதக் குழுக்களுடன் கடந்த 8 ஆண்டுகளாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி 

சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும். மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, நாடு முழுவதும் அதிர்ச்சி அடைந்தது. ஒரு சில பயங்கரவாதிகளால் நாடு அவமானப்படுத்தப்பட்டது.

துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில் - ஆளுநர் பரபர பேச்சு! | Who Uses A Gun Be Dealt With A Gun Tn Governor  

தாக்குதல் நடந்த 9 மாதங்களுக்குள், அப்போதைய இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

துப்பாக்கியால்தான் பேச வேண்டும்

என்ன இது? பாகிஸ்தான் நட்பு நாடா? அல்லது எதிரி நாடா? என்பதில் தெளிவே இல்லாமல் ஒரு ஒப்பந்தமா? புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாலகோட் வான்வழியில் நாம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தோம்.

பயங்கரவாதச் செயலை செய்தால் அதற்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அந்த பதில். வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.

ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் அந்த நபரிடம் துப்பாக்கியால்தான் நாமும் பேச வேண்டும் என கூறினார்.