'என் பேரு படையப்பா' பாடலில் வரும் இந்த 'குழந்தை ரஜினி' அந்த சீரியல் நடிகையா?
'என் பேரு படையப்பா' பாடலில் வரும் குழந்தை ரஜினியின் இப்போதை புகைப்படம்.
படையப்பா திரைப்படம்
இயக்குநர்க் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா. இதில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முக்கியமாக ரம்யா கிருஷ்ணன் வில்லி ரோலில் ரஜினிக்கு சமமாக கலக்கியிருப்பார். இந்த படம் கடந்த 1999ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், ரஜினி மற்றும் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமாரின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.
'என் பேரு படையப்பா'
இன்றளவும் படையப்பா படத்தை மக்கள் ரசித்து வருகிறார்கள். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'என் பேரு படையப்பா' என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்த பாடலின் இடையில் 'பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவச்ச குழந்தையப்பா' என்ற வரிகள் வரும்போது ரஜினியின் முகம் ஒரு குழந்தையின் முகமாக மாறும்.

அந்த குழந்தை தற்போது சீரியல்களில் கலக்கி வரும் ஹேமா பிந்து தான். அவர் இலக்கியா, இதயத்தை திருடாதே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை IBC Tamil