நடுரோட்டில் பணத்தை அள்ளி இறைத்த தாராள பிரபு - அதிரடி கைது!

Bengaluru
By Sumathi 1 வாரம் முன்

திரைப்படங்களில் வரும் காட்சி போல், ஒருவர் பணத்தை அள்ளி வீசியுள்ளார்.

தாராள பிரபு 

பெங்களூரின் கே.ஆர்.மார்கெட் மேம்பாலம் அருகே, இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் திடீரென மேம்பாலத்தின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கையில் வைத்திருந்த பையில் இருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து வீசத் தொடங்கினார்.

நடுரோட்டில் பணத்தை அள்ளி இறைத்த தாராள பிரபு - அதிரடி கைது! | Who Smuggled Money In Road Was Arrested Bangalore

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பணத்தை வாரி இறைத்த அந்த நபர் கோட் சூட் அணிந்தபடி நல்ல படித்தவர் போன்று காணப்பட்டார். அவரது கழுத்தில் சுவரில் மாட்டும் கடிகாரம் ஒன்றும் தொங்கிக் கொண்டிருந்தது.

அதிரடி கைது

மேம்பாலத்தின் இருபக்கமும் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்துள்ளார். தகவலறிந்து வந்து போலீஸார் விசாரித்ததில் பணத்தை வீசியவர் பெங்களூரு நாகரபாவியை சேர்ந்த அருண் என்பதும், இவர் தொழில் அதிபர் என்பதும் தெரியவந்தது.

யூ-டியூப் சேனல் நடத்தி வருவதுடன் அருண் வி டாட் 9 நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் 10 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் என ரூ.4 ஆயிரத்தை வீசியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.