தாக்கலான புதிய பட்ஜெட்; யார், யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? - முழு தகவல்

Smt Nirmala Sitharaman Government Of India Budget 2023
By Thahir Feb 01, 2023 07:37 AM GMT
Report

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான உச்சவரம்பு என்பது அதிகரிகப்பட்டுள்ளது.

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு 

அதன்படி, ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் அறிவிப்பு.

வருமான வரி விலக்கிற்கு உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Who should pay tax and how much?

ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை வருமானம் பெறுகிறவர்கள் ரூ.45,000 வரி செலுத்தினால் போதுமானது மத்திய அமைச்சர்.

யார், யார் எவ்வளவு வரி செருத்த வேண்டும்? 

அதன் படி யார் யார் எவ்வளவு வரி செருத்த வேண்டும்? என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

ரூ.0 முதல் ரூ.3 லட்சம் வருமானம் பெறுவோர் அரசுக்கு வரி கட்ட தேவையில்லை.

ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வருமானம் பெறுவோர் வருமானத்தில் இருந்து 5% வரி செலுத்த வேண்டும்.

ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சம் வரை வருமானம் ஈட்வோர் 10% வரி செலுத்த வேண்டும்.

ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 15% வரை வரி செலுத்த வேண்டும்.

ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 20% வரை செலுத்த வேண்டும்.

ரூ.15 லடசத்திற்கு மேல் வருமானம் பெறுவோர் 30% வரி செலுத்த வேண்டும்.