அதிமுக அரியணை யாருக்கு? இன்று முக்கிய தீர்ப்பு - தொண்டர்களின் திக் திக் நிமிடங்கள்..!

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Aug 17, 2022 03:56 AM GMT
Report

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

பொதுக்குழு வழக்கு 

கடந்த மாதம் ஜுலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தன்னிடம் ஒப்புதல் வாங்கவில்லை நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். வைரமுத்து என்பவரும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

Chennai High Court

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.அப்போது அவர் உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்புக்கு எதிரா ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் இந்த உயர்நீதிமன்றம் விசாரித்து உத்தரவு வழங்க ஆணையிட்டது.

அரியணை யாருக்கு? இன்று தீர்ப்பு 

மீண்டும் வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வந்தது.ஆனால் ஓபிஎஸ் தரப்பு நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

Admk

இந்த வழக்கினை கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விசாரித்து வந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்குகிறார் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன். இந்த வழக்கின் தீர்ப்பு பிற்பகல் வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.