எலான் மஸ்க்கின் ரகசிய காதலி இவர்தான்.. டிரம்ப் கொடுத்த இரவு விருந்தில் நடந்த சம்பவம் - போட்டோ வைரல்!
டிரம்ப் கொடுத்த இரவு விருந்தில் எலான் மஸ்க்கின் ரகசிய காதலி கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எலான் மஸ்க்
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் 20-01-25 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் தொழிலதிபர்கள் ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் டொனால்டு அதிபர் டிரம்ப் பிரமாண்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ரகசிய காதலி
அந்த விருந்தில் எலான் மஸ்க்கின் ரகசிய காதலி ஷிவோன் சிலிஸ் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் நீண்ட நாட்களாக எலன் மஸ்க் உறவிலிருந்து தற்போது இரட்டை குழந்தைகளுக்குத் தந்தையாகி உள்ளார்.
ஷிவோன் மற்றும் எலான் இடையிலான உறவு பற்றித் தெளிவான தகவல்கள் தற்பொழு வரை மர்மமாகவே உள்ளன. எனினும், அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த அவர் டிரம்ப்-இன் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் மஸ்க் உடன் ஷிவோன் எலிஸ் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.