சேவாக் யார்? அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை - ஷகிப் அல் ஹசன் பதிலடி!

Bangladesh Cricket Team Virender Sehwag T20 World Cup 2024
By Swetha Jun 15, 2024 06:04 AM GMT
Report

சேவாக் யார்? என ஷகிப் அல் ஹசன் தன்னை பற்றிய விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஷகிப் அல் ஹசன் 

முன்னதாக, வங்காளதேசத்தின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷகிப் அல் ஹாசனை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், முக்கியமான தருணத்தில் அவுட்டாகி வெளியேறிய வங்காளதேசத்தின் நட்சத்திர ஆட்டக்காரர் என கடுமையாக சாடினார்.

சேவாக் யார்? அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை - ஷகிப் அல் ஹசன் பதிலடி! | Who Is Sehwag Bangladesh Player Shakib Hits Back

நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில், 114 ரன் சேசிங் செய்த போது, ஷகிப் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து அன்ரிச் நார்ட்ஜேவுக்கு எதிராக ஒரு புல் ஷாட்டில் அவுட்டாகினார்.இது ஷகிப் retire ஆகா வேண்டிய நேரம் என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

சொதப்பும் ஃபார்ம்...நீ ஒன்னும் கில்கிறிஸ்ட் இல்லை - உன் தகுதிக்கு ஆடு!! சரமாரியாக சாடிய சேவாக்!!

சொதப்பும் ஃபார்ம்...நீ ஒன்னும் கில்கிறிஸ்ட் இல்லை - உன் தகுதிக்கு ஆடு!! சரமாரியாக சாடிய சேவாக்!!

சேவாக் யார்?

நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் ஷகிப்'பின் சராசரி 5.50. இரண்டு போட்டிகளில் அவர் 61.11 ஸ்ட்ரைக் ரேட்டில் 11 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் சேவாக்கின் அந்த விமர்சனம் பற்றி இப்போட்டியின் முடிவில் செய்தியாளர்கள் ஷகிப்பிடம் கேட்டனர். அப்போது குறுக்கிட்ட அவர் சேவாக் யார்? என்று பதிலடி கொடுத்தார்.

சேவாக் யார்? அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை - ஷகிப் அல் ஹசன் பதிலடி! | Who Is Sehwag Bangladesh Player Shakib Hits Back

இது தொடர்பாக பேசிய ஷகிப்,"சேவாக் யார்? ஒரு வீரர் எப்போதும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வருவதில்லை. பேட்ஸ்மேனாக இருந்தால் பேட்டிங்கிலும் பவுலராக இருந்தால் பந்து வீச்சிலும் அணியின் வெற்றிக்கு பங்காற்றுவதே அந்த வீரரின் வேலை. விக்கெட் விழுவது அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

அதேபோல அந்த வீரர் பீல்டராக இருந்தால் ஒவ்வொரு ரன்னையும் சேமித்து நிறைய கேட்சுகளை பிடிக்க வேண்டும். இதை தவிர்த்து யாருக்காகவும் எதையும் பதிலாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது விளையாடும் வீரர் தன்னுடைய அணிக்காக எவ்வளவு பங்காற்ற முடியும் என்பதை பார்ப்பதே முக்கியம்" என்று கூறினார்.