விஜய்யை எதிர்த்த ரஞ்சனா நாச்சியார்: யார் தெரியுமா?

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Fathima Mar 10, 2026 09:01 AM GMT
Report

விவாகரத்து தொடர்பில் பேசிய தவெக தலைவர் விஜய், கவலைப்படும் அளவுக்கு வொர்த் இல்லை என பேசியது சர்ச்சையை கிளப்பியது.

விஜய்யின் இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில் தவெக பெண் நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் நீண்ட அறிக்கை மூலம் காட்டமாக விமர்சித்தார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில், 25 ஆண்டுகளாக விஜய்யுடன் வாழ்ந்த மனைவிக்கே அவரை பார்க்க அனுமதியில்லை.

தாய், தந்தைக்கும் அனுமதியில்லை, நடுவில் ஒரு நபர் இருக்கிறார், தேவைப்பட்டால் அவர் யார் என்று கூறுவேன் என தெரிவித்தார்.

விஜய்யை எதிர்த்த ரஞ்சனா நாச்சியார்: யார் தெரியுமா? | Who Is Ranjana Nachiyar

யார் இவர்?

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாலாவின் அண்ணன் மகள் தான் இந்த ரஞ்சனா நாச்சியார்.

முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர், வெள்ளத்திரைக்கு அறிமுகமானார்.

துப்பறிவாளன், இரும்புத்திரை, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், தலைவன் தலைவி உட்பட பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

விஜய்யை எதிர்த்த ரஞ்சனா நாச்சியார்: யார் தெரியுமா? | Who Is Ranjana Nachiyar

சினிமாவில் நடித்துக்கொண்டே வழக்கறிஞர் பணியையும் செய்து வந்த ரஞ்சனா நாச்சியார், பாஜக வில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார், மாநில செயலாளராக பதவி வகித்தார்.

இந்நிலையில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக்கூறி தவெக வில் இணைந்து கொண்டார்.