ரூ.1.5 லட்சம் கோடி நிறுவன உரிமையாளர்; மொபைல்போன் கூட பயன்படுத்துவதில்லை - யார் இவர்?
இன்றைய காலத்தில், மாதம் சில ஆயிரங்களில் ஊதியம் பெறுபவர்கள் கூட விலையுர்ந்த ஸ்மார்ட்போன்கள், ஆடம்பர கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர், சொந்தமாக ஸ்மார்ட் போன் கூட இல்லாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
ராமமூர்த்தி தியாகராஜன்
சென்னையில் பிறந்த, விவசாய குடும்ப பின்னணியை கொண்ட ராமமூர்த்தி தியாகராஜன், தனது கல்லூரி படிப்பை சென்னை மற்றும் கொல்கத்தாவில் பயின்றுள்ளார்.
Credit : businesstoday.in
தனது இளம் வயதில் காப்பீடு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த அவர், அப்போது வங்கிகள், லாரி டிரைவர்கள் மற்றும் பிற குறைந்த வருமானம் ஈட்டும் நபர்களுக்கு கடனுதவி வழங்குவதை புறக்கணிப்பதை கவனித்த இவர், அவர்களை குறி வைத்து ஸ்ரீராம் சிட் பண்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இதன் மூலம் வெகுவாக வளர்ச்சியடைந்த அவரது நிறுவனம், தற்போது 1.50 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.
Credit : Zee News
நிதிசேவைகளை வழங்கி வரும் ஸ்ரீராம் குழுமம் பல்வேறு நிறுவனங்களை தொடங்கியுள்ளது. சுமார் 1,16,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இதில் சுமார் ரூ.6210 கோடியை தனது ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையிலான அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

Credit : asianet
தற்போது 88 வயதான ராமமூர்த்தி தியாகராஜன், மொபைல்போன் கூட பயன்படுத்துவதில்லை. மேலும், ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரையே பயன்படுத்தி வருகிறார்.
பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தாலும், ஆடம்பரத்திற்கு அடிமையாகாமல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவி வருகிறார் ராமமூர்த்தி தியாகராஜன்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |