யார் இந்த ராணி எலிசபெத்? பிறப்பு முதல் இறப்பு வரை

Queen Elizabeth II Death England
By Thahir Sep 08, 2022 06:38 PM GMT
Report

பிரிட்டன் மகாராணி லிலிபெட் என்ற எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ம் ஆண்டில் லண்டனில் பிறந்தார்.

இவரது தந்தை பெயர் ஆறாம் ஜார்ஜ். தாய் பெயர் எலிசபெத். இதனால் இவர் இரண்டாம் எலிசபெத் ராணி என அழைக்கப்பட்டு வந்தது.

இவர் பிறந்தபோது பிரிட்டன் மன்னராக அவரது தாத்தா ஜார்ஜ் -V இருந்தார். இவர் 1936 மரணமடைந்தார். இதையடுத்து மன்னராக எட்வர்ட் VIII பட்டம் சூடினார்.

இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டன் மன்னர் பதவிக்கான ரேஸில் எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் VI இருந்தார். அவரை தொடர்ந்து 2வது நபராக எலிசபெத் இருந்தார்.

இந்த வேளையில் எலிசபெத் ராணியாக முடியாது என்ற பேச்சுகள் அதிகமாக இருந்தன. அதாவது மன்னராக உள்ள எட்வர்ட் VIIIக்கு குழந்தைகள் பிறக்கும்.

இதனால் அவரது வாரிசுகள் அடுத்த மன்னராக வருவார்கள் என்ற பேச்சு இருந்தது. இந்த நிலையில் தான் மன்னர் எட்வர்ட் VIII மன்னர் பட்டத்தை துறந்தார்.

இதனால் அடுத்த பட்டத்து மன்னராக இருந்த எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் VI பிரிட்டன் மன்னராக முடிசூடினார்.

யார் இந்த ராணி எலிசபெத்? பிறப்பு முதல் இறப்பு வரை | Who Is Queen Elizabeth Ii

இதைத்தொடரந்து 1936ம் ஆண்டு முதல் பட்டத்து இளவரசி என்ற பெயரை எலிசபெத் பெற்றார். அவர் 10 வயது மட்டும் தான் நிரம்பியிருந்தது. இதனால் அவரது ஒவ்வொரு நகர்வும் பத்திரிகைகளில் விவரிக்கப்பட்டு ஆராயப்பட்டது.

1952ல் தந்தை ஜார்ஜ் VI மறைந்த நிலையில் எலிசபெத் மகாராணியாக பட்டம் சூடினார். இன்று காலமான 96 வயது பிரிட்டன் மகாராணி எலிசபெத் 1952ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகள் வரை மகாராணியாக ஆட்சி செய்தவர். இவர் லிலிபெட்' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார்.

முன்னதாக மகாராணி பிரிட்டன் இளவரசியாக இருந்தபோது செல்வ செழிப்பான வாழ்க்கையை நடத்தினார். அனைத்து வசதிகளும் அரண்மனையிலேயே இருந்தது. ஆசிரியர்கள் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு கல்வி போதித்தனர்.

விண்ட்சர் கிரேட் பூங்காவில் உள்ள குதிரை சவாரி உள்ளிட்ட மகிழ்ச்சியை அனுபவித்தார். 2-ம் எலிசபெத் தனது கணவரான பிலிப்பை முதன் முதலில் 8 வயதில் சந்தித்தார்.

பிலிப் கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசராக இருந்தார். எலிசபெத் தனது 13வது வயதில் காதலை பிலிப்பிடம் வெளிப்படுத்தினார்.

இதையடுத்து இருவரும் காதல் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பிறகு ஜூலை 1947ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 20ல் திருமணம் நடந்தது. இந்த திருமணம் சர்வேதேச நிகழ்வாக இருந்தது.

இளம் திருமணமான தம்பதிகளுக்கு ஒரு வருடம் கழித்து இளவரசர் சார்லஸ் பிறந்தார். அதன்பிறகு ஆன், ஆண்ட்ரூ, எட்வர்டு என்ற மகன்கள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ராணி எலிசபெத்? பிறப்பு முதல் இறப்பு வரை | Who Is Queen Elizabeth Ii

இதற்கிடையே தான் 1939ல் 2ம் உலகப்போர் தொடங்கியபோது ராணி எலிசபெத்தின் தாய் இங்கிலாந்தை விட்டு வெளியேறி கனடாவுக்குச் செல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

இருப்பினும், அவர் தாயார் வெளியேற மறுத்துவிட்டார். பெரும் புகழுடன் வாழ்ந்து மறைந்துவிட்டார் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்.