கேப்டன் பதவியில் இருந்து விலகும் தல? - அடுத்த கேப்டனாக பட்டியலில் இருக்கும் 2 இளம் வீரர்கள் யார் யார் தெரியுமா?
நடப்பாண்டு ஐபிஎல் சீசனுக்கான போட்டிகள் மார்ச் 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதற்காக சென்னை அணி வீரர்கள் சூரத்தில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட உள்ளனர்.
நடப்பு சீசனிலும் தோனி தான் கேப்டனாக செயல்படுவார் என்று சென்னை அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த கேப்டனை இப்போதே அறிவித்து விடலாம் என தற்போதைய அணியின் கேப்டன் தோனி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தான் ஐபிஎல் தக்கவைக்கும் பட்டியலில் தோனி தனக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாயை கொடுத்துவிட்டு, தமக்கு 12 கோடி ரூபாய் போதும் என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
தோனி அணியில் இருக்கும் போதே ஜடேஜாவை தயார் படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும், நடப்பு சீசனிலேயே, அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஜடேஜாவுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
எனினும் இது அணியின் வியாபாரத்தை பாதிக்கும் என்பதால் அந்த முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடக்கத்திலேயே இளம் வீரரை அணியின் கேப்டனாக நியமிக்கவேண்டும் என ஸ்ரீனிவாசன் நினைக்கிறார்.
அவர் மனதில் இருக்கும் 2 வீரர்களில் முதலாவதாக இருப்பவர் ருத்துராஜ் கெய்க்வாட். மற்றொருவர் தீபக் சாஹர்.
இனி நீ தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு தான் விளையாடுவாய் என்று ஸ்ரீனிவாசன் தம்மிடம் கூறியதாக தீபக் சாஹர் அன்மையில் கூறியிருந்தார்.
தற்போது ஆல்ரவுண்டராக விளங்கும் தீபக் சாஹர், கேப்டனாகவும் ஜொலிப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இதனால் தான் அவருக்கு 14 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே நிர்வாகம் செலவு செய்துள்ளது.