மருத்துவமனையில் கமல்..பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் பிரபலம் யார் தெரியுமா?

Kamal Haasan Bigg Boss
By Thahir 1 வாரம் முன்

காய்ச்சல் காரணமாக நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவமனையில் நடிகர் கமல் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 6. இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை செய்து வரும் நிலையில் பெரும் பரபரப்பாக செல்கிறது பிக் பாஸ் வீடு.

இந்த நிலையில் நடிகர் கமல் காய்ச்சல் காரணமாக சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்?

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் கமலுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதால் அவர் ஒரு மருத்துவமனையில் ஓய்வில் இருபார் என்றும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Who is going to host Bigg Boss?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களில் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் யார் தொகுத்து வழங்க போவது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.