Tuesday, Apr 29, 2025

5 பன்னீர் செல்வங்கள் தேடித்தேடி கண்டுபிடிப்பு - சதி வேலை செய்தது யார்?

Tamil nadu ADMK O. Panneerselvam Ramanathapuram Lok Sabha Election 2024
By Jiyath a year ago
Report

பலாப்பழம் சின்னம் எனக்கு கிடைத்தது இறைவன் செயல் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம்

பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதேசமயம் அதே தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

5 பன்னீர் செல்வங்கள் தேடித்தேடி கண்டுபிடிப்பு - சதி வேலை செய்தது யார்? | Who Is Behind 5 Panneer Selvam Nominations

ஒரே பெயரில் 6 பேர் மனுத்தாக்கல் செய்ததால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் ஒன்றில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் "நான் பல தேர்தல்களை கண்டிருக்கிறேன்.

டாஸ்மாக்கை மூட கோரிய பெண்கள்; உதயநிதி திருப்பி கேட்ட கேள்வி - பிரச்சாரத்தில் பரபரப்பு!

டாஸ்மாக்கை மூட கோரிய பெண்கள்; உதயநிதி திருப்பி கேட்ட கேள்வி - பிரச்சாரத்தில் பரபரப்பு!

சதித்திட்டம் 

ஆனால், ஒரு நிராயுதபாணியாக ஒரு சுயேச்சை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்ற எனக்கு இவ்வளவு ஆதரவு உள்ளது. மொத்தம் 6 பன்னீர் செல்வங்கள் வந்துவிட்டனர். வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இந்த சதிவேலையை செய்தது யார்? எப்படியோ சதித்திட்டம் வந்துவிட்டது. பன்னீர் செல்வம் என்ற பெயரை தேடித்தேடி கண்டுபிடித்துள்ளனர்.

5 பன்னீர் செல்வங்கள் தேடித்தேடி கண்டுபிடிப்பு - சதி வேலை செய்தது யார்? | Who Is Behind 5 Panneer Selvam Nominations

ஆனால், ஓட்டக்காரதேவர் பன்னீர் செல்வம் என்பது நான்தான். இன்னொரு ஓட்டக்காரதேவர் மகன் பன்னீர் செல்வத்தை அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. பலாப்பழம் சின்னம் எனக்கு கிடைத்தது இறைவன் செயல். இருப்பதிலேயே பெரியப்பழம் பலாப்பழம்தான்" என்று தெரிவித்துள்ளார்.