ருதுராஜுக்கு மாற்றாக CSKவில் இணையும் 17 வயது வீரர் - யார் இந்த ஆயுஷ் மாத்ரே?
ருதுராஜுக்கு மாற்றாக 17 வயதான ஆயுஷ் மாத்ரே CSK அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ருதுராஜ் விலகல்
5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த சென்னை கேப்டன் ருதுராஜ் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஆயுஷ் மாத்ரே
இந்நிலையில், ருதுராஜ் பதிலாக மும்பையை சேர்ந்த 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே(ayush mhatre), சென்னை அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன் ஆயுஷ் மாத்ரேவை ட்ரையலுக்காக சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்திருந்தது.
அப்பொழுதே, "ஆயுஷ் மாத்ரேவின் ஆட்டம் எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அணியில் புதிய வீரருக்கு தேவைபட்டால் அவர் ப்ளேயிங் XI-ல் சேர்க்கப்படலாம்" என சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
150 ரன்கள் குவித்த இளம் வீரர்
ஆயுஷ் மாத்ரே ரஞ்சி தொடரில் 8 போட்டிகளில் 2 சதத்துடன் 505 ரன்களும், விஜய் ஹசாரே தொடரில் சௌராஷ்டிர அணிக்கு எதிராக சதம் விளாசியதுடன் 7 போட்டிகளில் விளையாடி 458 ரன்களும் குவித்திருந்தார்.
மேலும், டெஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 150 ரன்கள் குவித்த இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அதே வேளையில், இன்று லக்னோவிற்கு எதிரான போட்டியில் இடம் பெற மாட்டார் என்றும், 20 ஆம் தேதி வெங்கடேவில் நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் அணியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.