WHO தலைவரை குறிவைத்த இஸ்ரேல்.. நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் - நடந்தது என்ன?
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலிலிருந்து உலக சுகாதார மையத்தின் தலைவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேல்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நிலவி வருகிறது. இதனால், பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.இதற்கு ஹமாஸ் குழுவினருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அந்த வகையில் நேற்று ஏமன் மீது இஸ்ரேலின் விமானப்படைகள் திடீர் தாக்குதலில் தலைநகர் சனாவில் உள்ள துறைமுகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் அதிகமாகப் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது.

இது நாட்டுகே ஆபத்து..இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் போட்ட பிளான் -தெரிந்தே சீனாவிடம் சிக்கியது எப்படி?
உயிர் தப்பிய சம்பவம்
குறிப்பாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலின் போது சனா விமான நிலையத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இருந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து WHO தலைவர் டெட்ரோஸ் அதோனம் தனது x தளத்தில், "விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது நாங்கள் அங்குதான் இருந்தோம்.
எங்கள் விமானத்தின் பணியாளர்களில் ஒருவர் காயமடைந்தார்" என்று கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.