“யாரோ தமிழ்நாடுன்னு சொல்லக்கூடாதுன்னு ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே” - யாரை திட்டினார் முதலமைச்சர்?

M K Stalin Tamil nadu DMK R. N. Ravi Governor of Tamil Nadu
By Thahir Jan 14, 2023 06:47 AM GMT
Report

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இளைஞர் அணி செயலியின் தொடக்க விழாவில் முதலமைச்சர் பேசிய நிகழ்வு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஆளுநர் மோதல் 

அண்மையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை தவிர்த்தார்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தமாக இருக்கிறது எனக் கூறி ஆளுநரின் பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெறாது என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்த நிலையில் அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி பாதியிலேயே வெளியேறினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக இளைஞரணி விழா 

இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர் அணி சார்பில் முரசொலி பாசறை மற்றும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை-2 தொடக்க விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர், அறிஞர் அண்ணாவை தான் பார்க்க சென்றதாகவும் அப்போது அவர் உடல் நிலை சரியில்லாமல் ஓய்வு எடுப்பதாக கூறி சந்திக்க விடாமல் அவரது பாதுகாவலர்கள் அனுப்பியதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தான் வந்ததை யாரோ அண்ணாவிடம் தெரிவிக்க அண்ணாவின் கார் எனது வீட்டிற்கு வந்து தன்னை அழைத்துச் சென்றதாக தெரிவித்தார்.

அப்போது அண்ணாவின் வீட்டிற்கு சென்ற போது அண்ணா படுத்திருந்தார். நான் போனதும் ஏன் வந்த போயிட்ட என்று கேட்டார்.

அப்போது நான் தேதி கேட்க வந்தேன் கீழே இருந்தவர்கள் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாங்க என்றதாக பேசினார்.

அதற்கு அண்ணா அவன் கிடக்கிறான் விடு என்று கூறிவிட்டு என்ன விஷயம் சொல்லு என்றார். தேதி வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறவே எதற்கு என்று அண்ணா கேட்டதாகவும் உங்களுக்கு மணி விழா நடத்த என்றும் எங்கே நடத்தப்போகிறாய் என்று அண்ணா கேட்டதற்கு கோபாலபுரத்தில் என்றும் தனது அப்பாவுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

அதற்கு அறிஞர் அண்ணா தேதி தருவதாக கூறியுள்ளார் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போவே கொடுங்கள் என கூறியதற்கு அண்ணா உங்க அப்பன் மாதிரி பிடிவாத காரனாக இருக்க என்று அண்ணா கேட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

அண்ணா உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு சென்றார் அதன் பிறகு வந்த அவர் அதிகமான நிகழ்ச்சிகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை பின்னர் ஒரே ஒரு நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டார்.

அது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் விழாவில் தான் கலந்து கொண்டார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அண்ணா பேசும் போது அருகில் இருந்து அதை டேப் போட்டு ரெக்கார்ட் செய்ததாகவும் அப்போது அவரின் எச்சில் தன் மீது பட்டதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

யாரை திட்டினார் முதலமைச்சர்?

அப்போது அண்ணா பேசுகையில் நிகழ்ச்சிக்கு போக கூடாது என்று எனது குடும்பத்தினர் தடுத்ததாகவும், கட்சியின் முன்னோடிகள் போக கூடாது என்று கட்டாயப்படுத்தினார்கள், மருத்துவர்கள் போகவே கூடாது என்று அறிவுறுத்தினார்கள் அத்தனையையும் மீறி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் ஏன் தெரியுமா?

Who did Chief Minister M. K. Stalin scold?

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைக்கும்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் இந்த உயிர் இருந்து என்ன பயன் என்று அண்ணா பேசியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னைக்கி யாரோ தமிழ்நாடுன்னு சொல்லக்கூடாதுன்னு ஓருத்தன் புலம்பிட்டு இருக்கானே நான் கேக்குறேன்...அதுக்கு மேல விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்றார்.

அப்போது அங்கிருந்த இளைஞரணி நிர்வாகிகள் கைத்தாட்டியும், விசில் அடித்தும் ஆராவாரம் செய்தனர்.