யார் முதல்வர்? எடப்பாடி, ஸ்டாலின் இடையே கடும் போட்டி.! முதல்கட்ட சர்வே முடிவுகள்

admk dmk ntk mnm
By Jon Mar 01, 2021 01:59 PM GMT
Report

கூட்டணி கட்சியினர் எல்லாம் அமைதியாக இருந்தும் எடப்பாடி பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட காரணமே, இருவருக்கும் ’இப்ப இல்லேன்னா எப்பவுமே இல்லை’ என்கிற நிலைதான். என்னதான் பல விசயங்களில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்தாலும், பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும், முதல்வர் வேட்பாளராக நின்று ஜெயிக்கவில்லை என்ற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமிக்கே அந்த ஒருகுறை இருக்கத்தான் செய்கிறது.

அதற்காக இந்த தேர்தலை அவர் முக்கியமாக கருதுகிறார். தவிர, சசிகலாவும் டிடிவி தினகரனும் ஒருபக்கம் கட்சியை கைப்பற்றியே தீருவோம் என்று சபதம் போட்டு அதற்கான வேலைகளை செய்து வருகின்றார்கள். ’நாங்க அண்ணன் – தம்பிங்க என்று வெளியே சொன்னாலும், உள்ளுக்குள் ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் ஓபிஎஸ்’ என்றே விமர்சனங்களும் இருக்கத்தானே செய்கிறது.

அதனால், கட்சி இருக்கும் நிலைமையை பார்த்தால், இந்த தேர்தலில் ஜெயித்துவிட்டால், கட்சி முழுவதும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின் கீழ் வந்துவிடும். அதிமுகவின் நிரந்தரமான தலைவராக ஆகிவிடுவார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவும் உடையாமல் இருக்கும். இந்த தேர்தலை விட்டால், அதிமுக நிச்சயம் உடையும்; நிர்வாகிகள் சிதறுவார்கள் என்ற நிலை இருக்கிறது.

அப்புறம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக எத்தனை அணியாக இருக்கும், இரட்டை இலை யார் கையில் இருக்கும், யாருக்குமே இல்லாமல் இரட்டை இலை முடக்கப்பட்டுவிடுமா என்பதெல்லாம் யாருமே இப்போதைக்கு யூகிக்க முடியாதுதான். இதை எல்லாம் உணர்ந்துதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொஞ்சம் கூட சோர்வில்லாமல், சூறாவளி பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார். ஸ்டாலினை பொறுத்தவரைக்கும் அவர் கட்சியின் தலைவர் ஆவதற்கே பெரும் போராட்டம் நடத்தினார்.

சகோதர யுத்தத்தினால் கடைசி நேரத்தில்தான் ஸ்டாலின் தலைவர் ஆனார். அதே போல்தான், அவர் முதல்வர் பதவிக்கும் போராடிக் கொண்டிருக்கிறார். என்னதான் அதிமுக மீது அவர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், தன் மேல் இருக்கும் கறை அவருக்கு தெரியாமலா இருக்கும். முந்தைய ஆட்சிக்காலங்களில் திமுகவினால் ஏற்பட்ட அதிருப்தி இப்போதும் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்.

மேலும், என்னதான் அதிருப்தி இருந்தாலும் கலைஞர் கருணாநிதி என்கிற பெயருக்கும், அந்த முகத்திற்கும் இருக்கும் ஆதரவு தனக்கு வர வாய்ப்பில்லை என்பதையும் ஸ்டாலின் உணர்ந்தவர்தான். அதனால்தான், கோடி கோடியாய் கொட்டி ஐபேக் குழுவினை களம் இறக்கி இருக்கிறார். இந்த தேர்தலை விட்டால் அடுத்தடுத்த தேர்தல்களை உதயநிதி சந்திக்கலாம். ஸ்டாலினும் அடுத்தடுத்த தேர்தலிலில் உதயநிதிக்கு வழிவிட்டுவிடுவார். ஆனால், உடல்நிலை கருதி இந்த தேர்தல்தான் தனக்கு முக்கியமான தேர்தல் என்றே கருதுகிறாராம் ஸ்டாலின்.

அதனால்தான் இளைஞர் மாதிரியே அவரும் சூறாவளி பிரச்சாரத்தினை மேற்கொண்டிருக்கிறார். உங்க ஓட்டு யாருக்கு? இருகட்சி தலைவர்களின் எண்ண ஓட்டமும் இப்படி இருக்க, இவர்கள் நம்பியிருக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிய, நமது ‘டாப் தமிழ் நியூஸ்’ டீம் சர்வேயில் இறங்கியது. அமைச்சர்கள் தொகுதிகள் அத்தனையையும் காலி செய்ய வேண்டும் என்று சவால் விட்டு, ஸ்டாலின் பரபரப்பை கூட்டியிருப்பதால், அமைச்சர்கள் தொகுதியான 31 தொகுதிகளில்தான் முதலில் நமது டீம் விசிட் அடித்தது.

அடுத்து, எம்.ஜி.ஆர். போட்டியிட்ட தொகுதி, ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி, கருணாநிதி போட்டியிட்ட தொகுதி, காமராஜர் போட்டியிட்ட தொகுதி என்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, அப்புறமாக எல்லா தொகுதியிலும் ஒரு விசிட் . உங்க ஓட்டு யாருக்கு? , எதுக்காக அவருக்கு ஓட்டு போடுறீங்க?, எதுக்காக …. கட்சியை புறக்கணிக்கிறீங்க?, உங்கள் தொகுதியில இருக்குற முக்கியமான பிரச்சனை என்ன?, ஆளுங்கட்சி மீது இருக்கும் அபிப்ராயங்கள் என்னென்ன?, ஆளுங்கட்சி மீது இருக்கும் அதிருப்தி என்ன?, எடப்படி பழனிச்சாமியின் ஆட்சி எப்படி இருக்குது? ஸ்டாலினை நீங்கள் நம்புகிறீர்களா?, திமுக வந்தால் நல்லது நடக்கும் என்று நம்புகிறீர்களா?, புதிய அரசிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் களமிறங்கியது டீம்.

ராமன் ஆண்டால் எனக்கென்ன? ராவணன் ஆண்டால் எனக்கென்ன? ராமன் ஆண்டால் எனக்கென்ன? ராவணன் ஆண்டால் எனக்கென்ன? என்கிற ரீதியில், யார் ஆட்சிக்குவந்தா எனக்கென்ன? நான் என் சின்னத்திற்குத்தான் ஓட்டு போடுவேன் என்கிற மனநிலையில்தான் வயதானவர்கள் பலரும் இருக்கிறார்கள். முதல் இரண்டு தொகுதிகளில் கிடைத்த இந்த அனுபவத்தை வைத்து, அடுத்தடுத்த தொகுதிகளில் வயதானவர்களோடு, புதிய வாக்காளர்களை அதிக கவனத்தில் கொண்டது நமது டீம்.

சர்வே முடிவுகள்: முதலமைச்சர் சாமானியராக அனைவரிடமும் பழகி வருவதும், எளியவர் ஒருவர் முதல்வராக வந்திருப்பதாகவும் தமிழக மக்கள் தங்கள் கருத்துக்களாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலமைச்சர் மேற்கொண்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

யார் முதல்வர்? எடப்பாடி, ஸ்டாலின் இடையே கடும் போட்டி.! முதல்கட்ட சர்வே முடிவுகள் | Who Chief Minister Tamilnadu Survey

அ.தி.மு.க கூட்டணி 44.1 வாக்கு சதவீதம் பெற்று முதலிடத்திலும், தி.மு.க கூட்டணி 42.3 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் 3.7 சதவீத வாக்குகளுடன் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும், அதை தொடர்ந்து அ.ம.மு.க 2.8% , மக்கள் நீதி மய்யம் கட்சி 2% பெற்றுள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிமுகவுக்கும் திமுகவுக்கு இடையே ஒன்னே முக்கால் சதவிகிதம்தான் வித்தியாசம் இருக்கிறது.

யார் முதல்வர்? எடப்பாடி, ஸ்டாலின் இடையே கடும் போட்டி.! முதல்கட்ட சர்வே முடிவுகள் | Who Chief Minister Tamilnadu Survey 

அ.தி.மு.க அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்விக்கு 33 சதவீதம் பேர் நன்றாக இருக்கிறது என்றும், 7 சதவீதம் பேர் சிறப்பாக இருக்கிறது என்றும், அதே சமயம் 21% மக்கள் சுமார் என்றும், 28% மக்கள் சரியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

யார் முதல்வர்? எடப்பாடி, ஸ்டாலின் இடையே கடும் போட்டி.! முதல்கட்ட சர்வே முடிவுகள் | Who Chief Minister Tamilnadu Survey

ஆட்சியை பொறுத்தவரை அ.தி.மு.க கூட்டணி 128 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என்றும், தி.மு.க கூட்டணிக்கு 100 இடங்களே கிடைக்கும் என்றும் நமது சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

யார் முதல்வர்? எடப்பாடி, ஸ்டாலின் இடையே கடும் போட்டி.! முதல்கட்ட சர்வே முடிவுகள் | Who Chief Minister Tamilnadu Survey

யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்கு 41 சதவீத மக்கள் எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஸ்டாலினை 40 சதவீத மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். டி.டி.வி தினகரனை 3.2 சதவீத மக்களும் ,கமல்ஹாசன் மற்றும் சீமானை 3% மக்களும் தேர்ந்தெடுத்துள்ளனர். கமல்ஹாசன், சீமான் இருவருக்கும் புதியவர்களின் ஆதரவுதான் அதிகம் இருக்கிறது.

இருவருக்குமே இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பது நமது சர்வே மூலம் தெரியவருகிறது. அடுத்த சர்வே கூட்டணி இன்னும் இறுதி ஆகாத நிலையில், தொகுதிப்பங்கீடு எதுவும் நடைபெறாத நிலையில், தற்போதிருக்கும் சூழலில் நடத்தப்பட்ட நமது முதற்கட்ட சர்வேயின் முடிவுகள்தான் இவை.

கூட்டணி இறுதி செய்தபின்னர், தொகுதிப்பங்கீடுகள் நடந்த பின்னரும் நமது டீம் இரண்டாம் கட்ட சர்வே நடத்த தயாராகவே இருக்கிறது. முதற்கட்ட சர்வே தெரிவித்துள்ள முடிவுகளின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றே மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.