தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர் : வாஷிங்டனுக்கு பதிலாக இடம்பெற போவது யார் தெரியுமா?
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவுள்ள வீரர்கள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் போட்டி க்ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது
இதனிடையே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரராக யார் களமிறக்கப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதலாவதாக ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத அக்ஷர் படேல் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சிறந்த தேர்வாக இருப்பார் என கருதப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தனது திறமையால் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ள இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இரண்டாவதாக தனது அபாரமான சுழற்பந்துவீச்சால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற ஜெயந்த் யாதவ் வெறும் 7 ஓவர்கள் மட்டுமே வீசினார். இருந்தபோதும் இவருடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் இவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
மூன்றாவதாக க்ரூணல் பாண்ட்யா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகி பேட்டிங்கில் மிக சிறப்பாக விளையாடி அரை சதம் பந்துவீச்சில் அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இதனால் இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை இந்திய அணி வழங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.