தீபக் சாஹருக்கு பதில் சென்னை அணியில் இடம் பெற போகும் வீரர் - இர்பான் பதான் நம்பிக்க்கை
ஐபிஎல் தொடரில் தீபக் சாஹருக்கு பதில் சென்னை அணியில் இடம் பெற போகும் வீரர் குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை அணியில் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில் ஆடவில்லை. மேலும் ஏப்ரல் மாத பாதியில் இருந்து சென்னை அணியில் தீபக் சாஹர் இடம்பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தீபக் சாஹருக்கு பதில் சென்னை அணியில் ராஜவர்த்தன் ஹங்ரேக்கருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். ஹங்ரேக்கர் திறமையான வீரர் என்பதை தாண்டி அவரால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும் என தான் நம்புவதாக பதான் கூறியுள்ளார்.