சீனாவில் கொரோனா நிலமை ரொம்ப கவலை கொடுக்கின்றது : உலகசுகாதார அமைப்பு கவலை

China
By Irumporai Dec 22, 2022 05:38 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் குறித்து உலகசுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது, இதனால் அங்கு பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, சீனாவில் தற்போது கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலைக்கு கவலை தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா நிலமை ரொம்ப கவலை கொடுக்கின்றது : உலகசுகாதார அமைப்பு கவலை | Who Advises China Covid19

இது குறித்து அவர் கூறுகையில் : உலகில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கவலை

குறிப்பாக சீனாவின் தற்போதைய நிலமை கவலையளிப்பதகவும் சீனாவின் கொரோனா பாதிப்பு பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். மேலும் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.