முழு நகரமே ஒரு கட்டிடம் தான் - மருத்துவமனை முதல் தபால் நிலையம் வரை ஒரே இடத்தில்!
ஒரு நகரத்தின் பெரும்பாலான மக்கள் ஒரு பெரிய கட்டிடத்தில் வசித்து வருகின்றனர்.
பெரிய கட்டடம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் பெரும் பகுதி பனியில் நிறைந்திருக்கும். இந்த மாநிலத்தில் விட்டெர் என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த பகுதியை 15 வருடங்களுக்கு முன்பு கடல் வழியாக தான் அடைய முடியும்.
இந்த நகரத்தில் 14 மாடிகள் கொண்ட ஒரே ஒரு பெரிய கட்டடம் மட்டும் தான் உள்ளது. அதிக குளிர் காரணமாக அடிக்கடி வெளியே செல்ல முடியாததால், இந்த நகரத்தின் பெரும்பாலான மக்கள் இந்த கட்டடத்தில் தான் வாழ்கின்றனர். இந்த கட்டிடத்தில் சுமார் 200 வீடுகள் இருக்கின்றன.
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ளது. பயங்கரமான பனிப்பொழிவின்போது மக்களால் வெளியில் செல்லமுடியாது, அதனால் அனைத்தும் ஒரே கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் துறைமுக இருப்பதால், இங்குள்ள மக்களின் பிரதானமான வேலைவாய்ப்பு அங்குதான் அமைந்துள்ளது.
வரலாற்று சான்று
மேலும், இந்த கட்டடத்தில் காவல்நிலையம், அத்தியாவசிய தேவைக்கான கடைகள், கோவில், மருத்துவமனை, தபால் நிலையம் ஆகிய அனைத்தும் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பனிப்போர் நிலவிய காலத்தில் இங்கு ராணுவ துறைமுகம் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து இங்கு ராணுவத்தளம் உருவாக்கப்பட்டு, ராணுவ வீரர்கள் குடும்பமாக குடிப்பெயரத் தொடங்கினர். இங்கு பனிப்பொழிவு அதிகரிக்கும்போது நகரத்தின் பாதி பகுதி பனியில் மூழ்கி விடும். இதனை சமாளித்து வாழும் வகையில் கடந்த 1954-ம் ஆண்டு தொடங்கி 1957-ம் ஆண்டு வரை ஸ்டீல் மற்றும் கான்கிரேட் கொண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டது.
1956-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்த இந்த கட்டிடத்திற்கு முதலில் Hodge கட்டடம் என்று பெயர் இருந்தது. பின்னர் அமெரிக்க அரசிடம் இருந்து இந்த கட்டிடம் மக்களால் வாங்கப்பட்ட பிறகு 1972-ம் ஆண்டு Begich Towers என்று மாற்றப்பட்டது. இந்த கட்டடம் அலாஸ்காவின் வரலாற்று சான்றாகவும் திகழ்கிறது.