வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் ட்ரம்ப்.. இறுதி உரையில் பேசியது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார். நடைமுறைப்படி புதிய அதிபரை பதவியில் உள்ளவர் வரவேற்பது வழக்கம். ட்ரம்ப் அந்த நடைமுறையை மீறியுள்ளார். மேலும் ஜோ பைடன் பதவியேற்பிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
150 ஆண்டுகளில் புதிய அதிபரின் பதவியேற்பை வெளியேறும் அதிபர் புறக்கணிப்பது இதுவே முதல்முறை. வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் முன்பாக பேசிய ட்ரம்ப், “கடந்த நான்கு ஆண்டுகள் சிறப்பாக அமைந்தன. நான் உங்களுக்காக தொடர்ந்து போராடுவேன். நான் எல்லாவற்றையும் கவனித்து கொண்டு தான் இருப்பேன்.
இந்த நாடு இப்போது இருப்பதைப் போல சிறப்பாக இருந்ததில்லை, புதிய அரசாங்கத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். சட்டப்படி அதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அதற்குள்ளாக என்ன நடக்கும் என்பதை தற்போது கணிக்க முடியாது. ட்ரம்ப்பும் கணிக்க முடியாதவர் தான்.