விராட் கோலிக்காக வந்த புறாக்கூட்டம் - இயற்கையான மரியாதையால் நெகிழ்ந்த ரசிகர்கள்
கோலிக்கு கௌரவம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான விராட் கோலி, கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஒரு கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பல்வேறு பெருமைகளை பெற்றுத்தந்த விராட் கோலிக்கு முறையான ஃபேர்வல் இல்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நேற்று மீண்டும் தொடங்கியதால், அந்த போட்டிக்கு வரும் ரசிகர்கள் வழக்கமான RCB அணியின் ஜெர்சியை அணிந்து வராமல், விராட் கோலியின் ஜெர்ஸியை அணிந்து வந்து கௌரவிக்க முடிவு செய்தனர்.
ஆனால் நேற்று பெங்களுருவில் கன மழை பெய்ததால், சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த RCB மற்றும் KKR அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவில்லை.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக கொல்கத்தா அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.
கூட்டமாக வந்த வெள்ளைப்புறாக்கள்
கொட்டும் மழையில் ரசிகர்கள் வெள்ளை நிற ஜெர்ஸி அணிந்து கோலியை கௌரவிக்க மைதானத்தில் குவிந்தனர். இதனிடையே மழை சிறுது நேரம் நின்ற போது, வெள்ளைப்புறாக்கள் கூட்டமாக மைதானத்திற்கு பறந்து வந்தது.
A group of white pigeons giving a perfect tribute to Kohli's retirement from Tests 🕊️ pic.twitter.com/vxuCH5sLk5
— A (@Only_VKohli) May 17, 2025
இதை கண்ட ரசிகர்கள், டெஸ்ட் போட்டியின் வெள்ளை நிற ஜெர்சியை போல், வெள்ளைப்புறாக்கள் பறந்ததால், கோலியை கௌரவிக்கவே புறாக்கள் மைதானத்திற்கு வந்ததாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
