ஐயா ஒயிட் போர்டு பஸ் குறைச்சு போச்சு - முதலமைச்சரிடம் முறையிட்ட பெண் பயணிகள்..!

M. K. Stalin DMK
By Thahir May 08, 2022 02:25 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடங்கள் நேற்றோடு நிறைவு பெற்றது.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மந்தைவெளி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்தார்.

சாலையில் நின்று கொண்டிருந்த முதலமைச்சரை கண்ட பொதுமக்கள் அவருக்கு கைகளை உயர்த்தி வணக்கம் வைத்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தில் ஏறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச பேருந்து பயணம் குறித்து பெண்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது பெண்கள் ஒயிட் போர்டு பேருந்துகள் குறைந்தளவில் இயக்கப்படுவதாக கூறினார்.மேலும் கூடுதலான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் பேருந்தில் இருந்து இறங்கி தனது காரில் ஏறி அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.